• Jul 18 2025

நான் வரலன்னு வைரலாக்குறாங்க! முதல்வர் வந்தது தான் உன்ர Range டா! வடிவேலுவின் Audio வைரல்..

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் காமெடி என்றாலே நினைவிற்கு வரும் முக்கியமான இரு பெயர்கள் தான் வடிவேலு மற்றும் கிங் காங். 90களிலிருந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து பார்வையாளர்களை சிரிக்க வைத்த இந்த இருவரும், ஒருவருக்கொருவர் மிக நெருக்கமான நட்பைப் பேணிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.


இந்நிலையில், சமீபத்தில் நடந்த நடிகர் கிங் காங் மகளின் திருமணம் தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வடிவேலு திருமணத்தில் பங்கேற்கவில்லை என்ற செய்தி, ரசிகர்களிடையே சிறிய ஏமாற்றத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது வடிவேலுவும், கிங் காங்கும் கதைத்த ஒரு உணர்ச்சி மிகுந்த தொலைபேசி உரையாடலின் ஆடியோ கிளிப் வெளியாகியுள்ளது. அந்த உரையாடல் தற்பொழுது மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. 


நடிகர் கிங் காங், தனது மகளின் திருமணத்தை மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக கொண்டாட விரும்பினார். திரைப்படத் துறையில் தன்னுடன் பயணித்த நண்பர்கள், சக நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரிடமும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்திருந்தார். இந்த நேர்மையான அழைப்பிற்கு பலர் உற்சாகமாக பங்கேற்றிருந்தாலும், சிலர் பங்கேற்காமல் இருந்தனர்.

அவ்வாறு பங்கேற்காது இருந்தவர்களில் ஒருவர் தான் நகைச்சுவை நாயகன் வடிவேலு. இதனை ரசிகர்கள் ஓரளவுக்கு விமர்சித்துக் கொண்டிருந்த நிலையில், இந்த ஆடியோ வெளியானது பரபரப்பை தணித்தது.


அந்த ஆடியோவில் வடிவேலு கூறியதாவது, "நான் ஷூட்டிங்கில் இருந்ததால் தான் வர முடியல. நான் வரலன்னு கொளுத்தி போடுவாங்க… அதெல்லாம் நம்பாத…!" என்றார்.

மேலும் வடிவேலு, "8 கோடி மக்களின் பிரதிநிதியாக முதல்வர் வந்திருந்தார். அது உன் உழைப்புக்கு கிடைத்த  மரியாதை...." எனவும் கூறியிருந்தார். இதனை கேட்ட கிங் காங் "நீங்கள் எப்போது மதுரை வருவீங்கன்னு சொல்லுங்க… குழந்தைகளை அங்க கூட்டி வந்து ஆசிர்வாதம் வாங்குறேன்!" என்றார். இந்த உரையாடல் சமூக ஊடகத்தில் வைரலாகி மக்கள் மனதில் கேள்விகளையும் புரிதல்களையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement