• Apr 27 2025

கல்யாணத்திற்கு சம்மதித்தமைக்கு காரணம் இது தான்..! அர்ஜுன் குறித்து பேசிய தம்பிராமையா..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

ஆக்சன் ஹிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பிரபல காமெடி நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையவினை கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடனும் நடைபெற்ற திருமணத்தினால் அனைவரும் சந்தோஷம் அடைந்தனர்.


இந்த ஆண்டு தல பொங்கலை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய இவர்கள் சமூக ஊடகங்களில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.இந்த நிலையில் தம்பி ராமையா தற்போது தனது குடும்பத்துடன் நேர்காணல் ஒன்றில் கலந்து தமது சம்பந்தி வீட்டார் குறித்து பேசியுள்ளார்.


குறித்த நேர்காணலில் அர்ஜுன் மற்றும் மகள் திருமண சம்மந்தம் குறித்து " போகும்போது திருமணத்துக்கு ஒத்துக்கணுமே ஒத்துக்கணுமே என நினைச்சிட்டு போனேன் அர்ஜுன் சார் ஒத்துக்கிட்டார் வீட்டுக்கு வரும்பொழுது பாபாவை பாத்தேன் எல்லை இல்லாத மகிழ்ச்சி காரணம் ரெண்டு இவனை பார்த்தவுடனே நான் தானே ஞாபகம் வருவேன் பாப்பாவை பார்த்தவுடனே யார் ஞாபகத்துக்கு வருவார் அர்ஜுன் சார் தான் அவர் யார் ஒரு தேசப்பற்று உள்ள ஒருவர் சிரமப்பட்டு போராடி தன்னை அடையாளப்படுத்தி மேலே வந்தவர் குடும்பத்தை நேசிக்கிறவர்.கோயில் மேல அன்பு செலுத்துறவர் .சொசைட்டி அவர் அப்புடி பாத்திட்டு இருக்கு என் மனைவி ஆங்கில வருஷத்தினுடைய முதல் நாளில் பிறந்தவர்.சாரினுடைய மனைவி தமிழ் வருடத்தினுடைய முதல் நாளில் பிறந்திருக்காங்க என்னுடைய ஓரியினால் பெயர் ராமசாமி அர்ஜுன் சார் அப்பா பெயர் ராமசாமி நாங்க இருவரும் பிறந்த வருடம் ஒன்று என இரு வீட்டாருக்கும் இடையில் இருக்கும் பூர்வ ஜென்ம பந்தத்தினால் தான் எனக்கு அந்த குடும்பத்தினை பிடித்தது." என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement