• Apr 27 2025

பொலிஸ் விசாரணையில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்..! நடந்தது என்ன?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான நடிகர் தர்ஷன் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தகவலின் படி, சென்னையில் கார் பார்க் செய்ததை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட தகராறு, தற்பொழுது பொலிஸில் புகார் அளிக்கும் அளவுக்கு மாறியுள்ளது. மேலும், இவ்விவகாரம் நீதிமன்ற நடவடிக்கையை நோக்கிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


சென்னையின் முக்கியமான பகுதியில் கடந்த இரவு நடிகர் தர்ஷன் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அங்கு காரை பார்க்கிங் செய்த இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இவ்வாக்குவாதம் கடுமையான மோதலாக தற்பொழுது மாறியுள்ளது.

இதன்போது உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் தாக்கப்பட்டதாக புகார்கள் வெளியாகியுள்ள. இச்சம்பவத்தின் பின்னணியினை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் இவ்விசாரணையை  தீவிரப்படுத்தியுள்ளனர்.


இதன்போது சிறிய கருத்து வேறுபாடு மட்டுமே நடந்ததாகவும் எங்களால் யாரும் தாக்கப்படவில்லை என்றும் தர்சன் கூறியுள்ளார். மேலும் இச்சிக்கலுக்கு விரைவில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனத் தர்ஷனின் நண்பர்கள் கூறியுள்ளனர். சமூக ஊடகங்களில் இத்தகவல் வைரலாகி ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement