தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார் நடிகர் யோகிபாபு மற்றும் ‘கஜானா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர். திரைப்பட புரொமோஷன் நிகழ்வில் கலந்து கொள்ளாததற்காக, யோகிபாபுவை நேரடியாக விமர்சித்துள்ளார் தயாரிப்பாளர். இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக வைரலாகி வருகின்றது.
புதிய திரைப்படமான ‘கஜானா’ மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான புரொமோஷன் நிகழ்வு சென்னையில் நடைபெற்று வந்தது. படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த யோகிபாபு, இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்பது தயாரிப்பாளரை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
அந்த மேடையில் தயாரிப்பாளர் கூறியதாவது, "நீ நடிகனா இருக்கவே தகுதி இல்ல என்று கூறியதுடன், தான் நடித்த படத்தின் புரொமோஷனுக்கு வருவது ஒரு நடிகனின் பொறுப்பு. ஆனால் எங்களோட படத்தை முடிச்சதும் அவர்களுக்கு எங்களோட தொடர்பே இல்லாமல் போய்விடுகிறது… இது வேதனை தரக்கூடியது..!" என்று கூறினார்.
மேலும், "படம் எடுத்தாச்சு, அவருக்கு சம்பளம் கொடுத்தாச்சு. ஆனா அந்த படம் ரிலீஸாகும் நேரத்தில், யோகிபாபு இப்படி செய்வது ரொம்பவே கேவலமான விஷயம். நீங்க உங்க பட புரொமோஷனுக்கு வராம இருந்தா, அந்த படம் எப்படி ஹிட் கொடுக்கும்..?" என்று கோபமாகத் தெரிவித்திருந்தார்.
இந்த வார்த்தைகள் யோகிபாபுவின் ரசிகர்களை கொஞ்சம் அதிர்ச்சியடைய வைத்தது. சிலர் தயாரிப்பாளரின் கருத்துக்களை ஆதரிக்கிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பல விவாதங்கள் எழுந்துள்ளன.
Listen News!