தமிழ் சினிமாவில் தற்போது பல முன்னணி கதாநாயகிகள் வரிசையில் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளவர் நடிகை கயாடு லோகர். சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘டிராகன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த கயாடு, அவரது அழகு மற்றும் வசீகரமான முகபாவனைகள் மூலம் திரையரங்குகளில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்துள்ளன. இந்த போட்டோஷூட்டில் கயாடு லோகரை காணும் பொழுது ஒரே ஒரு வார்த்தை தான் தோன்றுகிறது அது அழகு மட்டும் தான் எனப் பார்வையாளர்கள் கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாகியவுடன், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே அதிகளவான கமெண்ட்ஸ் புயலாக வந்துகொண்டே இருக்கின்றன. ‘டிராகன்’ படத்திற்குப் பிறகு கயாடு லோகரின் மார்க்கெட் சூப்பராக வளர்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் பலரும் தற்போது இவரைத் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இளம் வயதில் இருந்தே மாடலிங் செய்து வந்த கயாடு, ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான தோற்றத்தையும், திறமையையும் நிரூபித்துள்ளார். இதனால் தான் ரசிகர்கள் மட்டுமல்ல, பிரபலங்களும் இவர் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
Listen News!