• Dec 24 2024

சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்! இனி காமெடி தெறிக்குமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

குறித்த தொடரில் முத்து, மீனா கதாபாத்திரத்தை முக்கியமாக வைத்து தொடர் ஒளிபரப்பாக ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்,  சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய நடிகர் ஒருவர் என்ட்ரி ஆகியுள்ளார்.


குறித்த சீரியலில் ரோகிணியின் அப்பா பணக்கார அப்பா, அவர் மலேசியாவில் இருக்கார் என பொய் சொல்லி சமாளிக்கிறார்.


தற்போது பொங்கல் சீர் பிரச்சனையில் இருந்து தப்பிக்கவே, இவ்வாறு  ஒருவரை அவசரமாக ஏற்பாடு செய்கிறார் ரோகிணி. 

அவரின் உறவினராக தற்போது சீரியலில் நியூஎன்ட்ரி கொடுக்கிறார் பிரபல நடிகர் ஜெயமணி. இவர் திருமதி செல்வம் தொடரில் பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

Advertisement

Advertisement