• Dec 24 2024

தல அஜித்துடன் இணைந்த டோலிவுட் பிரபலம்! AK 63 தொடர்பில் மாஸ் அப்டேட்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித், இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்து வருகின்றார்.

விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்த நிலையில், அஜித்தின் 63வது படம் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

அதன்படி, அஜித்தின் ஏகே 63 படத்தில் டோலிவுட் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விடாமுயற்சி படத்தை தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63வது படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் அஜித். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.


மார்க் ஆண்டனி படத்தை டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு இயக்கியிருந்த ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை காமெடி என்டர்டெயினராக எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது அஜித்துடன் இணைந்த அந்த டோலிவுட் பிரபலம் யார் என்பது சஸ்பென்ஸ் ஆகவே வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement