நீண்ட கால இடைவேளையின் பின் சிம்பு கமல்காசனுடன் இணைந்து மணிரத்னம் இயக்கத்தில் "thugh life " எனும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கான புரொமோஷன் வேலைகளை படக்குழு ஆரம்பித்துள்ளது. படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பட ப்ரோமோஷனில் நடிகர் சிம்புவை பார்த்து ஊடகவியலாளர் நீங்கள் முந்தைய பட சூட்டிங்கில் ஏன் சரியான நேரத்துக்கு வருவதில்லை என்ற கேள்விக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது "இயக்குநர் நேரத்துக்கு வராம நான் முன்னாடி வந்து என்ன செய்ய அதுமட்டுமல்லாமல் சூட்டிங்கில் தான் பல இயக்குநர்கள் அன்று எந்த காட்சி எடுக்கணும் எண்டு முடிவெடுக்கிறாங்க " என கூறியுள்ளார்.
மேலும் "ஆனால் மணி சார் காலையில எல்லாருக்கும் முன்னாடி அவர் வந்து நிப்பார் அண்டைக்கு என்ன எடுக்கணும் என கிளாரிட்டியா தெரியும் அதை மட்டும் தான் எடுப்பார். ஒரு விஷயத்தை நம்ம கிட்ட சொல்லனும்னா கிட்ட வந்து சொல்வார். மைக் வைச்சு கத்த மாட்டார். இதெல்லாம் காரணமா இருக்குறதால தான் நான் அவர் படத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறேன்." என கூறியுள்ளார்.
Listen News!