• Dec 26 2024

கமலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள மறுப்புத் தெரிவித்த நடிகர் சிம்பு- இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் கமல்ஹாசன்.இவர் நேற்றைய தினம் தன்னுடைய 69வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர் அத்தோடு இவரது பிறந்தநாள் விழாவில் இதில், சூர்யா, அமீர்கான், சிவராஜ்குமார், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

ஆனால், இதில், நடிகர் சிம்பு கலந்துகொள்ளவில்லை. சிம்புவின் 48வது படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இந்தப் படம் குறித்த அபிஸியல் அப்டேட் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. 


படத்திற்காக சிம்பு உடல் உடையை குறைத்து, செம்ம எனர்ஜிட்டிக்காக போட்டோ ஷூட் நடத்தி வந்தார். இந்நிலையில், கமல்ஹாசன் பர்த்டே பார்ட்டியில் சிம்பு கலந்துகொள்ளவில்லை என்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிம்பு கலந்துகொண்டிருந்தார்.


ஆனால், முக்கியமான விழாவான கமல் பிறந்தநாள் நிகழ்சியில் சிம்பு கலந்துகொள்ளவில்லை. STR 48 படத்துக்காக சிம்பு தொடர்ந்து வெளிநாடுகளில் தான் பயிற்ச்சி எடுத்து வருகிறார். அதனால் தான் கமல் பிறந்தநாள் விழாவுக்கு வர முடியவில்லையாம். ஏற்கனவே STR 48 படப்பிடிப்பு தாமதம் ஆகிக்கொண்டே இருப்பதால், அதற்கு தீவிரமாக ரெடியாகி வருகிறார் சிம்பு. அவரால் தான் இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 


Advertisement

Advertisement