• Sep 04 2025

பாலாவின் இலவச மருத்துவமனைக்கு இடம் கொடுத்தது யார் தெரியுமா?

Aathira / 18 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் KPY பாலா. இவர் விஜய் டிவியில்  தனது காமெடி மூலம் பிரபலமானார். அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும்  கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைத்தார்.  பிறகு அதே டிவி சேனலில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.  தற்போது வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். 

பாலா தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பங்கை  ஏழை மக்களுக்காக  செலவழிக்கின்றார்.  அதன்படி  ஆம்புலன்ஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு ஐந்து ஆம்புலன்ஸ்களை  வாங்கி கொடுத்தார்.  பெட்ரோல் பங்கில்  தனக்கு பைக் இல்லை என்று ஏங்கிய இளைஞனுக்கு புதிய பைக் ஒன்றையும் வாங்கி கொடுத்தார். 

மேலும் மாற்றுத்திறனாளிகள்,  பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,  வயதானவர்கள், இளைஞர்கள் என்று எவ்வித  வேறுபாடும் இன்றி அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றார். பாலாவின் இந்த  செயலைப் பார்த்து அவருடன்  ராகவா லாரன்ஸும்  கை கோர்த்தார். இதன் மூலம் இருவரும் இணைந்து மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார்கள். 


KPY பாலா தற்போது இலவசமாக மருத்துவமனை ஒன்றை கட்டி வருகின்றார்.  சென்னை பல்லாவரம் அருகே கட்டி வரும் இந்த மருத்துவமனையில்  சிகிச்சை பெற வரும் மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் இலவசமாகவே மருத்துவ சேவைகளை வழங்குவது தான் தனது நோக்கம் என தெரிவித்திருந்தார். 

மேலும் இந்த மருத்துவமனையை கட்ட யாரிடமும் பணம் வாங்கவில்லை. இது என்னுடைய சொந்த உழைப்பில் மட்டுமே உருவாகின்றது எனவும் தெரிவித்தார். 

இந்த நிலையில், KPY பாலா இலவச மருத்துவமனையை கட்டுவதற்கு இடப்பற்றாக் குறையால் தவித்த போது,  இன்றைய மதிப்பில் சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய நிலத்தை பாலாவுக்காக இலவசமாகவே வழங்கி உள்ளார் விஜய் டிவி  பிரபலமான நடிகர் அமுதவாணன்.  தற்போது இந்த தகவல் பலராலும் பாராட்டப்பட்ட வருகிறது. 



 

Advertisement

Advertisement