• Sep 04 2025

ஜேசன் சஞ்சயின் படத்திற்கு சோதனை...!வெளியான காரணம் என்ன தெரியுமா?

Roshika / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், சினிமா இயக்குநராக அறிமுகமாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த பின், லண்டனில் சினிமா தொடர்பான படிப்புகளை கற்றார். அங்கு தனது நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களை உருவாக்கிய அவர், பின்னர் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றார்.


இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் தொடங்கியும், சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியும் இருந்தன. ஆனால் தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்டது.

விவரங்களைப் பொறுத்தவரை, இப்படத்தை முடிக்க இன்னும் ரூ.8 கோடி தேவைப்படுவதாகவும், லைக்கா அந்த தொகையை ஒதுக்கத் தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இப்படம் "ஃபர்ஸ்ட் காப்பி" அடிப்படையில் தயாரிக்கப்பட்டதால், முழு நிதிச் சுமையையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டிய அவசியமில்லை.


இது விஜய் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 250 கோடி சம்பளம் வாங்கும் விஜய்யின் மகன் இயக்கும் படம் 8 கோடிக்காக நிற்பது வேதனையாகவே உள்ளது. இது படம் கைவிடப்பட்டதா அல்லது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.

Advertisement

Advertisement