• Dec 25 2024

சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜய்... வெளியானது தளபதி 68 நியூ லுக்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் அளவில் எதிர்பார்த்த லாபத்தை அடைந்து வருகிறது. அத்துடன் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு லியோ படம் அவர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கிறது. 


ரசிகர்கள் எதிர்பார்த்த ஆடியோ லான்ச் இல்லாததால் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக லியோ படத்தின் வெற்றி விழா இரு தினங்களுக்கு முன் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கிடையில் விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்தில் இருந்தார். 


ஆனாலும் ரசிகர்களுக்காக சூட்டிங்கில் இருந்து பாதியிலேயே கிளம்பி லியோ படத்தின் சக்சஸ் மீட்டிங்கு வந்தார். அவர் நினைத்தபடியே வெற்றிகரமாக வெற்றி விழாவை முடித்து விட்டார். அத்துடன் மறுபடியும் படப்பிடிப்பிற்காக இன்று காலை தாய்லாந்து கிளம்பி விட்டார்.


சென்னை விமான நிலையத்தில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முழு பாதுகாப்புடன் போயிருக்கிறார். அதில் விஜய்யை பார்க்கும் பொழுது தளபதி 68 படத்திற்கான புது கெட்டப்புடன் ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக வைத்துக்கொண்டு இருக்கிறார். பொதுவாக இவருக்கும் ஹேர் ஸ்டைலுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி தான் ஒவ்வொரு படத்திலும் இருக்கிறது.


தளபதி 68ல் லியோ படத்தில் எப்படி பல பிரபலங்கள் வந்து நடித்தார்களோ, அதே போல் இதிலும் பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, ஜெயராம், பிரேம்ஜி, சினேகா மற்றும் லைலா போன்ற பல பிரபலங்கள் இணைந்து இருக்கின்றார்கள் ஆக மொத்தத்தில்  மொத்த டீமும் சேர்ந்து தாறுமாராக படத்தில் பட்டைய கிளப்பப்போகிறார்கள் என்று விளங்குகிறது.

Advertisement

Advertisement