• Dec 26 2024

50% சமமாக இல்லை.. கமல்ஹாசன் பிரிவு குறித்து முதல் முறையாக மனம் திறந்த கெளதமி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் உடன் நடிகை  கெளதமி சில ஆண்டுகள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த  நிலையில் திடீரென இருவரும் பிரிந்தனர். தங்கள் பிரிவிற்கு இருவரும் சமமாக 50 சதவீதம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவில்லை என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் கடந்த 90 ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்தவர் கௌதமி என்பதும் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நடிகை கௌதமி கடந்த 1998 ஆம் ஆண்டு சந்திப் பாட்டியா என்பவரை திருமணம் செய்த நிலையில் ஒரே ஆண்டில் அவரை விவாகரத்து செய்து விட்டார் என்பதும் அவருக்கு சுப்புலட்சுமி என்ற ஒரே ஒரு மகள் மட்டும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன் உடன் அதிக திரைப்படங்களில் நடித்த கௌதமி அவருடன் சில ஆண்டுகள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் திடீரென ஒரு நாள் அந்த உறவை துண்டித்து விட்டு மகளுடன் சென்று விட்டார். தன்னுடைய மகளின் பாதுகாப்புக்காக மட்டும் இந்த உறவிலிருந்து பிரிவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நீண்ட நாட்களுக்கு பின் கமல்ஹாசன் உடனான உறவு குறித்து அவர் மனம் திறந்து பேசி உள்ளார். அதில் ’ஒரு உறவு நீடிக்க வேண்டுமென்றால் அந்த உறவில் இருக்கும் இரண்டு பேரும் ரிலேஷன்ஷிப்பை 50 சதவீதம் சமமாக, முழுமையாக கொடுக்க வேண்டும். ஆனால் என்னுடைய விஷயத்தில் அது நடக்கவில்லை. இதை நான் ஒரு பெரிய பாடமாக கற்றுக் கொண்டேன். இருவருக்கும் இடையே உள்ள அன்பு, அர்ப்பணிப்பு ஆகியவை சமமாக இருந்தால் மட்டுமே அந்த உறவு நீடிக்கும்’ என்று தெரிவித்துள்ளார். நடிகை கௌதமியின் இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement