• Dec 27 2024

பாஸ்போர்ட்டும் தொலைஞ்சிருச்சு.. 15 லட்சமும் போச்சு.. கமல், அஜித், விஜய் நடிகைக்கு வந்த சோதனை..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன், அஜித், விஜய், பிரசாந்த் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை தனது பாஸ்போர்ட்டையும் காணவில்லை, 15 லட்சமும் போச்சு என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பியுள்ளார்.

’ஜெமினி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’அன்பே சிவம்’ ’திவான்’ ’திருமலை’ ’வில்லன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கிரண். இவர் பிரத்யேகமாக ஒரு கிளாமர் இணையதளத்தை தொடங்கி அதன் மூலம் ஏராளமாக சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதில் இருக்கும் தன்னுடைய அரை நிர்வாண படங்கள், கிளாமர் படங்கள் பார்ப்பதற்கு என  தனித்தனியாக கட்டணம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு செல்வதற்காக ஏஜென்சி ஒன்றிடம் தனது பாஸ்போர்ட் மற்றும் பணம் கொடுத்த நிலையில் அந்த நிறுவனம் அவரது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டதாகவும் விசாவையும் எடுத்து தரவில்லை என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பியுள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு செல்லாததால் தனக்கு 15 லட்சம் ரூபாய் நஷ்டம் என்றும் விமான டிக்கெட், ஹோட்டல் அறை புக் செய்த காசு எல்லாமே போய்விட்டது என்றும் அதுமட்டுமின்றி இன்னும் தனக்கு பாஸ்போர்ட்டும் கையில் வந்து சேரவில்லை என்றும் கூறியுள்ளார். இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து தனது பாஸ்போர்ட் திரும்ப கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement