• Dec 27 2024

லியோ படத்தில் அந்த காட்சி தான் அட்லீக்கு பிடிக்குமாம்! அவரே கொடுத்த பாராட்டு

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் விஜய் நடித்த லியோ திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த படத்தில் விஜய் திரிஷா இணைந்து இருந்தார்கள்.

இந்த படத்தில் விஜயுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தார்கள். முற்றிலும் மாறுபட்ட ரீதியில் விஜயின் நடிப்பு இந்த படத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் அவருடைய கெட்டப்பும் பல ரசிகர்களை கவர்ந்தது.

அப்பாவித்தனமான விஜயின் நடிப்பு ஒரு பக்கம் இருந்தால், அதிரடியான மிரட்டலில் இன்னொரு பக்கம் மிரட்டி இருப்பார் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.


இந்த படத்திலும் நடிகர் விஜயுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது. அதன்படி பிரபுதேவா, பிரசாந்த், லைலா, மைக் மோகன், சினேகா என பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் கூட்டணி அமைத்துள்ளார்கள்.

இந்த நிலையில், தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

அதாவது, லியோ படத்தில் காபி கடையில் வரும் அந்த சண்டை காட்சி தான் தனக்கு பிடித்த ஒன்று என கூறியுள்ளார். அதற்கு காரணம் அதில் ஒரு அப்பாவின் உணர்வை ஒரு அப்பாவாக தத்ரூபமாக வெளிப்படுத்திருந்தார் விஜய் எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement