• Dec 26 2024

இரண்டாண்டுகளை கடந்திருக்கும் திரைக்காவியம் "சீதா ராமம்" !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

வரலாற்று காவியங்கள் மற்றும் கதைகளை திரைப்படங்களாக்கும் இந்தக் காலத்தில் சில திரைப்படங்கள் ரசிகர்கள் நெஞ்சில் காவியங்களாக பதிவாகிப்போகின்றன.அந்த வகையில் "சீதா ராமம்" திரைப்படத்திற்கு தனிப்பங்குண்டு.  வைஜெயந்தி மூவிஸ் மற்றும் சுவப்னா சினிமா இணைந்து தயாரித்து அனு ராகவபுடி இயக்கத்தில் வெளியானது "சீதா ராமம்".

சீதா ராமம் Review - அதிகம் ஈர்க்கும் காதலும் காட்சிகளும் | Sita Ramam movie  review - hindutamil.in

தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்ட இத் திரைப்படம் வெளியீட்டின் போது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழிமாற்றம் செய்தும் வெளியிடப்பட்டது.துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர்,ராஷ்மிகா மந்தண்ணா,கவுதம் வாசுதேவ் மேனன் என பிரபல நட்சத்திரங்கள் இணைந்த இப் படத்தின் வெற்றி எதிர்பார்பை தாண்டிய ஓர் வெற்றியாக கருதப்பட்டது.

Our Sita has seduced you

காதலுக்கு இலக்கணம் சொல்லும் எத்தனையோ திரைப்படங்களை கண்டிருந்த போதும் "சீதா ராமம்" அவை அனைத்தையும் தாண்டிய ஓர் கதையாக மக்கள் மனங்களை வென்றது.கடமையை பெரிதாய் நினைக்கும் ராணுவ வீரனின் காதல் எத்தகைய வியப்புக்குரியது என சொல்லும் கதைக்களத்தில் துல்கர் சல்மான் வாழ்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

duquar salman act new movie sita ramam

இன்றைய இந்திய சினிமாவிற்கு கிடைத்திருக்கும் அரும் பொக்கிசமான நடிகை மிருணாள் தாக்கூரின் திறமை இந்த படத்தின் மூலம் தான் வெளிவந்து அனைவர்க்கும் அவரை நிரூபித்தது எனலாம்.இன்றும் சீதா மஹாலட்சுமி கதாபாத்திரம் அவரூடு செய்திருக்கும் மாற்றத்தை காணக்கூடியதாய் உள்ளது.

Sita ramam Latest News Galatta.com

காதல் கதையில் கடமையும் அடுத்தடுத்து திருப்பங்களுடனான திரைக்கதையும் ரசிகர்களை இருக்கையோடு ஒட்ட வைத்தது என்றே சொல்லலாம்.கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 இல் வெளியாகி வெற்றியடைந்த "சீதா ராமம்" படத்தின் 2ஆம் ஆண்டு நிறைவை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள் படக்குழுவினர்.


Advertisement

Advertisement