• Dec 26 2024

பிக் பாஸ் சீசன் 8 கலந்து கொள்ளவுள்ள பிக் மனிதர்..? அப்போ ஃபுல் என்டர்டைன்மெண்ட் தான்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இன்னும் நான்கு நாட்களில் அதிரடியாக ஆரம்பிக்கப்பட உள்ளது. பிக் பாஸ் சீசன் 8-ல் புதிய போட்டியாளர்கள் களமிறங்க உள்ளதோடு இதில் புதிய ஹோஸ்டாக விஜய் சேதுபதி கலந்து களமிறங்கி உள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை ஆரம்பமாக உள்ள எட்டாவது சீசனில் இருந்து விலகி இருந்தார். அதற்கு காரணம் தனக்கு இருக்கும் படப்பிடிப்பு என்று சொல்லப்பட்டது. ஆனாலும் கமலஹாசன் அமெரிக்காவில் ஏஐ டெக்னோலஜி பற்றி படித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து கமலஹாசனின் இடத்திற்கு விஜய் சேதுபதி தயார் ஆனார். தற்போது இன்னும் நான்கு நாட்களில் ஆரம்பமாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ரசிகர்கள் மிக ஆர்வமாக காணப்படுகின்றார்கள். அதே நேரம் விஜய் சேதுபதியின் ஆட்டத்தை பார்ப்பதற்கு எதிர்பார்த்தும் உள்ளனர்.


பிக் பாஸ் சீசன் எட்டில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றி நாளாந்தம் தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன. எனினும் உறுதியான தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

இந்த நிலையில், பிக் பாஸ் எட்டாவது சீசனில் ரவீந்திரன் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியின் கணவரான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சிகளை பற்றி ரிவ்யூ பண்ணுவதில் பிரபலமாக காணப்படுகின்றார். அதேபோல சர்ச்சைகளுக்கு பெயர்  போனவராகவும் காணப்படுகின்றார். எனவே இவர் வந்தால் இந்த ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement