• Dec 26 2024

முத்தழகு சீரியலுக்கு சுபம் போட்ட விஜய் டிவி.. பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சி எப்போ தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று பெயர் போனதுதான் விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் என்பவற்றிற்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, முத்தழகு, நினைத்தேன் வந்தாய், மகாநதி, பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 போன்ற பல சீரியல்கள் இல்லத்தரசிகளுக்கு மட்டும் இல்லாமல் விளம்பர ரசிகர்களுக்கும் உகந்ததாக காணப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியல் நிறைவுக்கு வந்துள்ளது. இதனை படக் குழுவினர் புகைப்படத்தோடு சந்தோஷமாக வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட உள்ளதால் டிஆர்பி ரேட்டிங்கில் சரிவாக காணப்பட்ட சீரியல்களை ஒரு வெளியாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். அந்த வகையிலேயே முத்தழகு சீரியல் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.


இதுவரையில் பழைய ஞாபகங்களை எல்லாம் இழந்து இருந்த முத்தழகு அஞ்சலியின் சூழ்ச்சியால் தனது குழந்தையையும் பிரிந்து இருந்தார். ஆனால் தற்போது அஞ்சலி அவரை தலையில் அடிக்க பழைய ஞாபகங்கள் எல்லாம் முத்தழகிற்கு வந்ததோடு மீனாட்சி தமது மகள் என்று பூமிக்கும் சொல்லுகின்றார்.

மறுபக்கம் அஞ்சலி மீனாட்சியுடன் ஆட்டோவில் ஏர்போட்டுக்கு தப்பிச் செல்ல முயலுகிறார். ஆனாலும் அவர்களை பூமியும் முத்தழகும் மடக்கி விடுகின்றார்கள். இவ்வாறு இந்த சீரியலில் முத்தழகு பூமியின் பிள்ளை மீனாட்சி தான் என்று தெரியவந்துள்ளதோடு அஞ்சலியும் அஞ்சலியின் அம்மாவும் கம்பி எண்ண போகின்றார்கள்.

மேலும் இதன் இறுதிக்கட்ட எபிசோடு சனிக்கிழமை மூன்று முப்பது மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாகவும் தற்போது தகவல்கள்  வெளியாக உள்ளன.


Advertisement

Advertisement