• Jul 15 2025

ராம் சங்கையா இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம்...!எளிமையான முறையில் நடை பெற்ற பூஜை..!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த வளர்ச்சியை கண்டுகொண்டிருக்கும் நடிகர் கவின், தனது அடுத்த படத்திற்கு கமிட் ஆகி உள்ளார். இயக்குநர் ராம் சங்கையா  இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தின் பூஜை விழா இன்று (ஜூலை 14, 2025) சென்னை நகரில் எளிய முறையில் நடைபெற்றது.


படக்குழுவினரும், ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த இந்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பூஜை விழாவில் நடிகர் கவின் இயக்குநர் ராம் சங்கைய  அவருடன் நெருக்கமாக பேசும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பரிமாறப்பட்டு வருகின்றன.


இந்த புதிய படத்தின் கதைக்களம், மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில்,  பல படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த கவின், இந்த புதிய திரைப்படம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை  பதிவிட்டு வருகின்றனர். மேலும் இயக்குநர்  ராம் சங்கையா இவர் ஏற்கனவே சில  குறும்படங்களை இயக்கி புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement