• Jan 07 2025

வாழும் வள்ளல் வரிசையில் இணைந்த கூல் சுரேஷ்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கூல் சுரேஷ் காமெடி நடிகராக காணப்படுபவர். இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு பற்றி மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

நடிகர் சிம்புவின் தீவிர ரசிகனாக இருக்கும் இவர், நடிகர் சந்தானத்துக்கும் நெருங்கிய நண்பராக காணப்படுகிறார். இவர்கள் நடிக்கும் படங்களை வித்தியாசமான முறையில் ப்ரொமோட் பண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


அதன்படி இறுதியாக சந்தானம் நடித்த இங்கு நான் தான் கிங்கு  படத்திற்கு நுங்கு சாப்பிட்டுக் கொண்டே ப்ரோமோட் பண்ணி இருந்தார். அதேபோல வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் பாடையில் சென்று அந்த படத்தை பார்த்து இருந்தார்.


இந்த நிலையில், தற்போது காமெடி நடிகராக காணப்படும் கூல்  சுரேஷ் மகனால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவருக்கு தன்னால் இயன்ற உதவியென ஆட்டோ ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். சுமார் 3. 50 லட்சம் மதிப்புள்ள குறித்த ஆட்டோவை வாங்கி கொடுத்த தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது

அண்மைக்காலமாகவே தமிழ் சினிமாவில் லாரன்ஸ் ராகவாவை அடுத்து KPY பாலா ஏராளமான உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றார். தற்போது அவர்கள் இருவருமே சேர்ந்து மக்களுக்கு பணியாற்றி வருகின்றார்கள். அவர்களுடைய வரிசையில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் காணப்படும் பிரபலங்களும் இணைந்து கொண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement