• Aug 03 2025

அனிருத் செய்த வில்லங்கமான வேலை..கலாய்க்கும் ரசிகர்கள்..!

luxshi / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்துள்ள அனிருத் ரவிச்சந்தர், சமீபத்தில் வழங்கிய ஒரு தகவல் இணையத்தில் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை  ஏற்படுத்தியுள்ளது.


‘3’ திரைப்படத்தின் மூலம் தனுஷுடன் இணைந்து திரையுலகில் பிரகாசித்த அனிருத், தொடர்ந்து தனுஷுடன் பணியாற்றி பல ஹிட் பாடல்களை வழங்கினார்.

பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் வேறு வேறு பாதையில் சென்றனர். ஆனால் அனிருத் தொடர்ந்து வளர்ந்து, தற்போது ரஜினிகாந்த், விஜய், கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.


தற்போது சிவகார்த்திகேயனின் ‘மெட்ராஸி’, விஜய்யின் ‘ஜனநாயகன்’, ரஜினியின் ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட பல பிஸி பிராஜெக்ட்களில் ஈடுபட்டுள்ள அனிருத், அண்மையில் ஒரு பாடலுக்கான இரண்டு வரிகளை உருவாக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவர் நேராக ChatGPT-க்கு  எடுத்துக்கொண்டு, “இந்த பாடலுக்கான இரண்டு வரி கொடு” என கேள்வி எழுப்பியதாக கூறியுள்ளார்.

அதற்கான பதிலாக ChatGPT பல வரிகள் வழங்க, அதிலிருந்து அனிருத் தேவையான வரிகளை தேர்வு செய்து பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தகவல் இணையத்தில் வெளியாகியவுடன், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் விமர்சன கலவையுடன் அனிருத்தை கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

தற்போது ChatGPT போன்ற AI கருவிகள், பாடல்களிலிருந்து கதைகள் வரை பல தரப்பினராலும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், இசை உலகின் சூப்பர்ஸ்டார் அனிருத் கூட இதனை நம்பி வருகிறார் என்பதே ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement