• Aug 02 2025

அஜித் – அனிருத் கூட்டணியில் புதிய படம்...! வெளியான தகவல் இதோ...!

Roshika / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் நடித்துவரும் புதிய படத்தின் விவரங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த படம் கடந்த அக்டோபரில் படப்பிடிப்பை தொடங்கியபின், இப்போது ஜனவரியில் அதை முடித்துவிட்டனர். அதாவது, குறைந்த காலத்திலேயே படப்பிடிப்பு துல்லியமாக திட்டமிடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.


இந்தப் புதிய படத்தில் இசை அமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணியாற்றுவது உறுதியாகியுள்ளது. இது அஜித் மற்றும் அனிருத் கூட்டணிக்கு புதுசாக இருக்கும் என்றும், ரசிகர்கள் இந்த இசை கூட்டணியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.


படத்தை தயாரிப்பது ‘ரோமியோ பிக்சர்ஸ்’ நிறுவனமாகும். இதில் ராகுல் மற்றும் ஆதிக்க ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிப்புப் பொறுப்புகளை வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் MGR இன்ஜினியரிங் காலேஜில் பழைய தோழர்கள் என்பதும் சினிமா பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான தகவலாகும்.


ஹீரோயின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அஜித் வழங்கிய தேதிகளில் யார் shooting-க்கு கிடைக்கிறார்களோ, அவர்களில் ஒருவரைத் தேர்வு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, விரைவில் ஹீரோயின் அறிவிப்பும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement