அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய ‘ஜவான்’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஷாருக்கானுக்கு கிடைத்துள்ளது.
சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் ஷாருக்கானுக்கு கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பின் இந்த விருது கிடைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய விருது வென்ற ஷாருக்கானுக்கு ஜவான் இயக்குநர் அட்லீ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"ஜவான் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கிறது. இது என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று; ஷாருக் சார் உங்கள் அருகில் இருப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம், ஐயா. ஒரு ரசிகனாக, உங்களுடன் இணைந்து பணியாற்றுவதும், ஒரு படத்தை உருவாக்கி, அதை ஷாருக்கானின் மாஸ் முறையில் வழங்குவதும் கடவுளிடமிருந்து கிடைத்த தூய்மையான, தூய்மையான ஆசீர்வாதம், இறுதியாக, கடவுள் நம் வாழ்வில் மிகச்சிறந்த தருணத்தை நமக்குத் திருப்பித் தர மிகவும் கருணை காட்டுகிறார். இதைவிட அதிகமாகக் கேட்க முடியாது ஐயா. இது எனக்குப் போதுமானது; நான் உங்களுடைய சிறந்த ரசிகன், ஐயா. உங்களை நேசிக்கிறேன்.
இது என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாகும். நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன் என அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!