• May 05 2025

மயில்சாமி பற்றிய சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்த பிரபலம்..! என்ன தெரியுமா..?

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தன்னுடைய நையாண்டி கலந்த நடிப்பால் மட்டுமல்லாது, தனித்துவமான குரல், உணர்வு பூர்வமான பேச்சுக்களால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் மயில்சாமி. அவரது மறைவுக்குப் பிறகு, பலர் அவரை நினைவுகூர்ந்து வந்தாலும், சமீபத்தில் நடிகர் மற்றும் பேச்சாளர் RJ பாலாஜி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பகிர்ந்த ஒரு சிறிய சம்பவம் பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்திருந்தது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் RJ பாலாஜி, தன்னுடன் ஏற்பட்ட ஒரு அனுபவத்தின் மூலம் மயில்சாமியின் மனிதநேயத்தைப் பகிர்ந்துள்ளார். அதன் போது பாலாஜி கூறியதாவது, “ஒரு நாள் நாங்கள் இருவரும் காரில ஒன்றாக சென்று கொண்டிருந்தோம். அப்போது அவரிடம் 50,000 பணம் இருந்தது. அதன்போது சிலர் ரோட்டில வேலை செய்து கொண்டிருந்தனர். உடனே காரை நிறுத்திவிட்டு, அவர் அந்த பணத்தைக் கொண்டு போய் எல்லோருக்கும் கொடுத்துவிட்டார்..!”  என்றார்.


இந்த சம்பவத்தைக் கேட்டுப் பலரும் அதிர்ச்சியடைந்ததோடு, ஆழ்ந்த நெகிழ்ச்சியிலும் மூழ்கி விட்டனர். அந்த 50,000 என்பது பெரிய தொகையாக இருக்கலாம், ஆனால் அந்த தொகையை இவ்வளவு சுயநலமின்றி பகிர்ந்தவர் என்றால் அது அவருடைய மனிதாபிமானத்தை நிரூபித்துள்ளது. 

மயில்சாமி என்றால் நம்மில் பெரும்பாலானோருக்கு நகைச்சுவை நடிகர், காமெடி டைமிங் என்பன தான் நினைவுக்கு வரும். ஆனால், பாலாஜி பகிர்ந்த இந்த சம்பவம், அந்த சிரிப்புகளுக்குப் பின்னால் ஒரு பரிசுத்தமான மனம் இருப்பதை உணர்த்துகிறது.

Advertisement

Advertisement