தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ரசிகர்களின் மனதில் என்றும் அழியாத இடம் பிடித்திருக்கும் நடிகை நஸ்ரியா நசீம். தனது வித்தியாசமான நடிப்பு மட்டுமின்றி தனது அழகான புன்னகையாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டார். அத்தகைய நடிகை கடந்த சில மாதங்களாகவே சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகியே இருக்கின்றார்.
அவர் எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை உருவாக்கியிருந்தது. சிலர் “நஸ்ரியாவுக்கு ஏதும் பிரச்சனை இருக்கிறதா?” எனக் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். தற்பொழுது நஸ்ரியா எந்த நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றாது இருந்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.
அதன் போது அவர் கூறியதாவது, “கடந்த சில மாதங்களாக, நான் சமூக வலைத்தளங்களில் எதையும் பதிவிடவில்லை. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. காரணம் என்னவெனில் , மன ஆரோக்கியத்துடனும், தனிப்பட்ட சவால்களுடனும் சிறிது காலம் போராடி வருவதால் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், அழைப்புகளை ஏற்காமல் இருந்து சற்று ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.” எனத் தெரிவித்திருந்தார். இந்த உருக்கமான தகவல், நஸ்ரியாவை நேசிக்கும் ரசிகர்களைப் பெரிதும் பாதித்துள்ளதுடன் அனைத்து ஊடகங்களிலும் வேகமாக பரவியும் வருகின்றது.
Listen News!