• Sep 04 2025

பளார் பளார்னு அருணை போட்டுத் தாக்கிய முத்து.! புதிய சிக்கலில் ரோகிணி.. டுடே ரிவ்யூ

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் ,  மனோஜின் ஸ்டோர் ரூமுக்கு வந்த  ராணியும் அவரது புருஷனும்  தங்களுக்கு டிவியும், பிரிச்சும் வேண்டும் என்று கேட்கின்றார்கள்.  இதனால் மனோஜ் போலீசில் புகார் கொடுப்பதாக சொல்ல, ரோகிணி அவரை தனியாக அழைத்துச் சென்று  போலீசுக்கு சொல்ல வேண்டாம் என்று சொல்லுகின்றார். 

இதனால் மனோஜ் வேற வழி இல்லாமல் அவர்கள் கேட்ட சாமான்களை கொடுத்து அனுப்புகின்றார். அதன் பின்பு வீட்டுக்கு வந்து நடந்தவற்றை ரவி, ஸ்ருதியிடம் சொல்ல, அவர்களும் போலீசில் கம்பிளைன்ட் பண்ணுமாறு சொல்லுகின்றார் .  ஆனால்  ரோகிணி போலீசில் சொன்னால்  பொம்பளைங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க.. அதனால் சொல்ல வேண்டாம் என்று சொன்னதாக மனோஜ் சொல்லுகின்றார். 

அதன் பின்பு வந்த முத்து, மீனாவும்  நீங்க பணம் கொடுத்தால் தப்பு செய்ததாக தானே அர்த்தம்.. அதனால் உண்மையை அவர்களுடைய வாயாலே எடுக்க  பாருங்க...  கடையில் கேமரா வைத்து அவர்கள் கதைப்பதை பதிவு செய்யுமாறு ஐடியா கொடுக்கின்றார்கள். 


அந்த நேரத்தில் முத்து,  சீதா விஷயத்தில்  தனக்கு ஒரு ஐடியா வந்ததாக சொல்கின்றார்.. அதன்படி  அடுத்த நாள்  அருணிடம் சென்று  எதற்காக இப்படி சண்டை மூட்டி விடுகின்றாய் என்று முத்து கேட்க, அவர்  இதுதான் உனக்கும் எனக்குமான வித்தியாசம்.. நான் படித்தவன்..  என்ன பண்ணனும் என்று எனக்கு தெரியும்..  அந்த ரவுடிகள் உன்னுடைய ஆட்கள் இல்லை என்றும் தெரியும்..  சீதாவுக்கு உன் மீது வெறுப்பு வரத்தான்  இப்படி பண்ணினேன் என்று சொல்லுகின்றார். 

இறுதியில் இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சீதாவும் மீனாவும் காரில் இருந்து வெளியே வருகின்றார்கள். இதை பார்த்து அருண் அதிர்ச்சி அடைகின்றார். இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement