• Jul 17 2025

நகைச்சுவையால் நூறு கோடி சம்பாதித்தவர் இவர் தான்..! யார் தெரியுமா?

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் இன்று காமெடி துறையில் ஜாம்பவானாக திகழ்பவர் பிரம்மானந்தம். பெரும்பாலும் தெலுங்கு திரையுலகில் அதிகப்படியாக பங்களித்தாலும், தமிழ், கன்னடம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தனக்கென ஒரு உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளார்.


67 வயதான இவர், 1987ஆம் ஆண்டு திரையுலகில் காலடி எடுத்து வைத்து, சுமார் நான்கு தசாப்தங்கள் கழிந்தும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால், எந்தவொரு கதைக்கும் வலுவூட்டும் குணச்சித்திர நடிகராக உயர்ந்துள்ளார்.


திரையுலகில் மட்டுமன்றி, ஹைதராபாத்தில் உள்ள சொகுசு வீடுகள், ஆந்திராவில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வணிக வளாகங்களில் செய்த முதலீடுகள் மூலம், இன்று இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர்களில் ஒருவர் எனக் கருதப்படுகிறார். ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் போன்ற பிரபல சொகுசு கார்கள் இவரிடம் உள்ளன.

இவர் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ. 500 கோடி என கூறப்படுகிறது. சிறந்த கலைஞராகவும், சந்தோஷத்தை பரப்பும் நகைச்சுவை வேடங்களில் தொடர்ந்து ஒளிரும் அவருக்கு, 2009ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பது அவரின் சாதனையை மேலும் வலுப்படுத்துகிறது.

Advertisement

Advertisement