பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தான் கூலி. இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம், லியோ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்திருந்தன.
கார்த்தி, விஜய், சூர்யா, கமலஹாசன் என்ற வரிசையில் தற்போது ரஜினிகாந்த்தும் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்துள்ளார். இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஹைப்பை கொடுத்துள்ளது. மேலும் கூலி திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்காவிட்டாலும் கடைசி 650 கோடிகளை சரி வசூலிக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கூலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், அமீர்கான், சத்தியராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் இருந்து இதுவரை மூன்று சிங்கிள்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
கூலி திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் ஏழு நாட்களை இருக்கும் நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படப் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து உள்ளது. குறித்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
Listen News!