தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அஜித்குமார். இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் கார் ரேஸிங், பைக் ரேஸிங்கிலும் ஈடுபட்டு வருகின்றார். வருடத்திற்கு ஆறு மாதம் சினிமா துறையிலும் அடுத்த ஆறு மாதங்கள் கார் ரேஸிங்கிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
கடந்த ஆண்டு அஜித்குமார் கார் ரேஸிங் என்ற நிறுவனத்தை அஜித் தொடங்கி இருந்தார். இந்த நிறுவனம் தொடங்கிய ஒரு ஆண்டிற்கு உள்ளேயே துபாய், இத்தாலி போன்ற இடங்களில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த நரேன் கார்த்திகேயன் அஜித் குமாரின் கார் ரேஸிங் நிறுவனத்தில் இணைந்துள்ளதாக நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். இவர் ஃபார்முலா ஓன் கார் பந்தய வீரராக திகழ்ந்து வருகிறார். தற்போது 'ஆசிய லீ மான்ஸ்' தொடரில் அஜித்தின் கார் ரேஸிங் நிறுவனத்திற்காக களமிறங்கியுள்ளார்.
இவ்வாறு நரேன் தங்களுடைய கார் ரேஸிங் அணியில் இணைவது மிகவும் சிறப்பானது என்றும் அவருடன் கார் ரேஸிங் பந்தயத்தில் பங்கேற்பது கௌரவமானது என்றும் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
அதேபோல் அஜித்குமாருடன் கார் பந்தயத்தில் இணைந்து செயலாற்றுவது தனக்கும் மகிழ்ச்சி என நரேன் கார்த்திகேயன் கூறியுள்ளார். தற்போது அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
We’re thrilled to welcome @narainracing to the Ajith Kumar Racing Team!”
Ajith Kumar: It’s truly a privilege to have Narain join the team. Racing alongside him is an honor. With Narain, this Asian Le Mans Series is something very special for all of us.”
Narain Karthikeyan:… pic.twitter.com/D8WJHi001L
Listen News!