• Aug 07 2025

நம்ம பிக்பாஸ் சம்யுக்தாவா இது..! ஸ்டைலிஷான லுக்கில் ஆளே மாறிட்டாங்களே..!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் மூலம் தமிழ் மக்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் சம்யுக்தா. தனது நேர்மையான பேச்சு, தைரியம் மற்றும் அழகான தோற்றம் மூலம் அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, நிகழ்ச்சிக்குப் பிறகு தனது ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்,மற்றும் சில திரைப்படங்களில் நடித்தும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இடம் பிடித்துக் கொண்டு வருகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் அவர் அழகிய ஒரு ஸ்டைலிஷ் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, சம்யுக்தா தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் ஒரு சிறிய supporting role செய்திருந்தார். அந்த வேடத்தில் அவர் மிகப்பெரிய ஸ்க்ரீன் ஸ்பேஸைப் பெறவில்லை என்றாலும், தனது அழகிய தோற்றத்தால் ரசிகர்களின் கவனத்தை சிறியளவில் ஈர்த்திருந்தார்.


இப்போது இணையத்தில் வைரலான புகைப்படத்தில் சம்யுக்தா ஸ்லிமாகவும், ஸ்டைலாகவும் காணப்படுகின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள்," அழகிற்கு அடையாளமே இவங்க தான்..!" என்று கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர். 



Advertisement

Advertisement