மலையாள திரையுலகில் தனிச்சிறப்புடைய நடிகராக வலம் வரும் ஜெயராம் மற்றும் திறமையான இளம் நடிகருமான காளிதாஸ் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தான் “ஆசைகள் ஆயிரம்”.
இந்தப் படத்தின் First Look Poster தற்பொழுது வெளியாகியுள்ளது. அப் போஸ்டர் வெளியாகியதிலிருந்து, ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகின்றது.
2000ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான “கொச்சு கொச்சு சந்தோசங்கள்” படத்தில், ஜெயராமின் சிறுவயது மகனாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தவர் காளிதாஸ். இப்போது, சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு, இருவரும் மீண்டும் திரையில் ஒரே படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது ரசிகர்களுக்கு பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“ஆசைகள் ஆயிரம்” என்ற தலைப்பே குடும்ப பாசம், தந்தை – மகன் உறவு, கனவுகள், வாழ்க்கை போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் போஸ்டரில், ஜெயராமும் காளிதாஸும் அருகருகே நிற்கும் நெகிழ்ச்சியூட்டும் காட்சி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது.
Listen News!