தமிழ் சினிமாவில் நகைச்சுவையையும், கிராமத்து ரசனையையும் திரைக்கு கொண்டுவந்த திரைப்படமாக ‘தேசிங்கு ராஜா’ விளங்குகின்றது. 2013ம் ஆண்டு வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, இப்படத்தில் விமல் மாஸ் ஹீரோ அவதாரம் எடுத்தார் எனவும் ரசிகர்களால் புகழப்பட்டார்.
அந்தவகையில் காமெடி கலந்த மாஸ் படமாக உருவான ‘தேசிங்கு ராஜா’ படத்தின் 2வது பாகம் தற்பொழுது உருவாகி வெளியாகவிருக்கிறது என்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படக்குழுவின் சமீபத்திய அறிவிப்பின் படி, ‘தேசிங்கு ராஜா 2’ திரைப்படம் ஜூலை 11, 2025 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக கூறியுள்ளனர்.
நடிகர் விமல், மீண்டும் அதன் முதல் பாகத்தில் நடித்தது போலவே நகைச்சுவை, காதல், மாஸ் மற்றும் எமோஷன்களுடன் கூடிய கதாப்பாத்திரத்திலேயே நடித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னடா நடித்துள்ளார்.
Listen News!