தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வருடங்களாக நீடித்து வரும் நடிகர் சூர்யா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு தனது நடிப்பு மற்றும் தனிப்பட்ட எண்ணங்கள் குறித்து சிறப்பாகப் பேசியுள்ளார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ என்ற படத்தில் நடித்துள்ள அவர், அதனை அடுத்து கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் இந்த உணர்வுபூர்வமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நேர்காணலில் சூர்யா கூறியிருந்த மிக முக்கியமான கருத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதன் போது அவர் கூறியதாவது, “என்னை எல்லாரும் ஒரு ஆக்டர் என்று சொல்லுறத விட, ஓவர் ஆக்டிங் ஆக்டர் என்று தான் சொல்லுவாங்க. ஆனால், நான் பாலா அண்ணன் சொல்லி கொடுத்தபடி தான் நடிக்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
சூர்யாவுக்கும் இயக்குநர் பாலாவுக்கும் இடையேயான நெருங்கிய பந்தம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நந்தா , பிதாமகன் போன்ற ஆழமான கதைகளைப் புகழ்த்தக்க நடிப்புடன் சூர்யா எடுத்துச் சென்றபோதும், சில விமர்சகர்கள் அவருடைய நடிப்பில் ‘ஓவர் ஆக்டிங்’ இருக்கிறது என விமர்சித்ததையும் இவர் ஒப்புக்கொண்டார்.
சினிமாவில் அனுபவம் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும், ஒவ்வொரு வேலையையும் கற்றுக்கொண்டு, அதில் சிறந்து விளங்கவேண்டும் என்பதே தனது நோக்கமென்றும் சூர்யா தெரிவித்தார். இதில் சூர்யா கூறிய நெகிழ்ச்சியான எடுத்துக்காட்டு தம்பி கார்த்தி நடித்த 'மெய்யழகன்' படம் தொடர்புடையதாகும். அந்த படத்தில் கார்த்தியின் இயல்பான நடிப்பை பாராட்டிய சூர்யா, “அந்த மாதிரி ஒரு இயல்பு எனக்கு வராது. நான் பண்ண முடியாது. அது அவரோட ஸ்டைல். அதுல அவரை மாதிரி நான் நடிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
Listen News!