• Jul 12 2025

‘இரும்புத்திரை’ இயக்குநரின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா.? வைரலான அப்டேட் இதோ.!

subiththira / 21 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிரடியான படைப்புகள் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தைக் கொண்டவர் இயக்குநர் பி.எஸ். மித்ரன். ‘இரும்புத்திரை’ மூலம் நடிகர் விஷாலை வைத்து டெக்னாலஜி மீதான த்ரில்லர் ஒன்றை எடுத்து, தமிழ் சினிமாவுக்கு புதுமைத் தொடக்கமொன்றை கொடுத்திருந்தார்.


அதன் பின் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தில் சூப்பர் ஹீரோ டச் கொண்ட சமூக செய்தியுடன் கூடிய ஸ்டைலிஷ் கதையை எடுத்தார். அண்மையில் கார்த்தியுடன் இணைந்து ‘சர்தார்’ என்ற ஸ்பை த்ரில்லரை இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது.


இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது பி.எஸ். மித்ரன்-கார்த்தி கூட்டணி மீண்டும் இணைந்து ‘சர்தார் 2’ என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகின்றனர். இதுவும் முழுமையாக ஒரு திரில்லர் படமாகவே உருவாகி வருகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், இயக்குநர் பி.எஸ். மித்ரனின் அடுத்த முயற்சி குறித்து தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சர்தார் 2’ படத்தை முடித்தவுடன் அவர் நேரடியாக தெலுங்கு சினிமாவில் கால் வைக்க உள்ளார்.


பி.எஸ்.மித்ரனின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement