• Jul 14 2025

‘ராத்திரி சிவராத்திரி’ பாடல் சர்ச்சை..! – வனிதாவிற்கு உயர்நீதிமன்றம் கொடுத்த நோட்டீஸ்!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

இசைப் புயல் இளையராஜா சமீபத்தில் வெளியான Mrs & Mr திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராத்திரி சிவராத்திரி' பாடலை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகை வனிதா விஜயகுமாருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், நீதிபதி, “வனிதா விஜயகுமார் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்” எனக்கூறி உத்தரவு பிறப்பித்தார். இதன் மூலம், தமிழ் சினிமா மற்றும் காப்புரிமை உரிமைகளைச் சுற்றிய சர்ச்சைகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


Mrs & Mr படத்தில் ‘ராத்திரி சிவராத்திரி’ பாடல் தற்காலிக இசை மற்றும் மாடர்ன் அலங்காரங்களுடன் மீண்டும் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இளையராஜா தனது இசையை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கிறார்.

Advertisement

Advertisement