இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சமீபத்தில் சென்னை மசூதியில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் பிரபல வலைபேச்சாளர் அந்தணன் தனது கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அவர் பதிவில் கூறியுள்ளபடி, "இப்படியொரு இப்தார் நோன்பு நிகழ்ச்சியை நான் பார்த்ததே இல்லை.. எத்தனையோ தலைவர்கள் இப்தார் நோன்பு திறந்திருக்கிறார்கள். எங்கேயுமே தங்களுடைய கண்ணியத்தை அவர்கள் இழந்ததில்லை. ஆனால்.. நேற்று விஜய் வந்தார். வரும்போதே தேர்தல் பிரச்சாரத்துக்கு வேனில் வருவது போல. கையை காட்டிக்கொண்டே தொப்பி வேற போட்டிருந்தார். தலைவா என்று. இஸ்லாமியர் அல்லாதவர்கள் எல்லாம் கூச்சலிட்டு, மசூதிக்குள்ளேயும் அவர்கள் புகுந்து விட்டார்கள். சிலர் குடித்துவிட்டு வந்துவிட்டார்களாம். காலை முதல் மாலை வரை எச்சில்கூட விழுங்காமல் நோன்பு இருக்கும்போது. இப்படி சம்பந்தமில்லாதவர்கள் நுழைந்து, அந்த இடத்தின் புனிதத்தையே மாசு படுத்துவதை எப்படி ஏற்க முடியும்? " என தெரிவித்துள்ளார்.
இந்த விவாதம் தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களையும் எழுப்பியுள்ளது. மேலும் இது குறித்து பலர் வித்தியாசமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!