• Jun 08 2025

கமல் சார் மாதிரி ட்ரெஸ் வாங்கச்சொல்லி அடம்பிடிப்பேன் இன்று அவருடன் நடிக்கிறேன்! கல்கி பட விழாவில் நெகிழ்ச்சி !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

பல படங்கள் நடித்தாலும் ஏதாவது ஒரு ஹிட் படம் நடித்ததும் உலக அளவில் பிரபலமாகுபவர்கள் உள்ளனர். அவாறே பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமாகிய பிரபாஸ் கல்கிதிரைப்பட விழாவில் கமல் காசன் பற்றி பெருமையாக பேசியுள்ளார்.


ஈஸ்வர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஆவார். தொடர்ந்து இவர் பல படங்கள் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளார். சமீபத்தில் இவர் கல்கி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த திரைப்பட விழாவில் கமல்காசன் பற்றி சில வார்த்தைகள் பேசியுள்ளார்.


அவர் கூறுகையில் " கமல் சார் படத்தில் பயன்படுத்திய உடைகள் மாதிரியே எனக்கும் உடைகள் வாங்கித் தர வேண்டும் என்று சிறுவயதில் என் பெற்றோரிடம் அடம் பிடித்துக் கேட்டிருக்கிறேன். இப்போது அவருடனே சேர்ந்து நடிப்பது ரொம்ப பெருமையாக இருக்கிறது" என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement