தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தனித்துவமான நடிப்பால் புதிய பாதையை உருவாக்கிய சியான் விக்ரம், கொரோனா காலத்திற்குப் பிறகு வசூல் ரீதியாக சவால்களை சந்தித்து வருகிறார். தற்போது அவர் மீண்டும் எழுச்சி பெறும் நோக்கில் நான்கு புதிய படங்களில் நடிக்கத் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்னியன், சேது, தூள், சாமி, பித்தமகன், ஐ போன்ற படங்கள் மூலம் விக்ரம் தமிழ் சினிமாவில் தனக்கென உயர்ந்த இடத்தைப் பெற்றார். கதாபாத்திரத்திற்காக உடல் மற்றும் மனதளவில் முழுமையாக மாறிக்கொள்ளும் திறமையால் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
ஆனால் சமீப ஆண்டுகளில் அவரது படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. கோப்ரா, தங்கலான், வீர தீர சூரன் போன்ற படங்கள் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தாலும் வசூலில் பெரிய வெற்றி பெறவில்லை.

இது அவரது திறமையின்மை காரணமாக அல்ல, படத் தேர்வுகளில் உள்ள குறைபாடே காரணம் என தொழில்துறை வட்டாரங்கள் கருதுகின்றன. வீர தீர சூரன் படத்தில் கூட அவர் தனது நடிப்பால் திரையை ஆட்கொண்டதாக பலரும் பாராட்டினர்.
இதனால் விக்ரம் தற்போது தேர்வு செய்யும் புதிய கதைகளும் கதாபாத்திரங்களுமே அவரது அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கப் போகின்றன. "மீண்டும் அந்த பழைய விக்ரம் திரும்ப வருவாரா?" என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!