• Jul 12 2025

வனிதா மீது வழக்கு தொடர்ந்த இளையராஜா..! "Mrs & Mr" படத்தால் எழுந்த புது சர்ச்சை...

subiththira / 18 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையின் சக்தி என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் இசைஞானி இளையராஜா. ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்து, மூன்றுபேருக்கு இணையாக பணியாற்றியவர் என புகழப்படும் இவர், தற்போது ஒரு பாடல் உரிமை மீறல் வழக்கில் ஈடுபட்டுள்ளார்.


பிரபல நடிகை வனிதா விஜயகுமார் நடித்துள்ள 'Mrs & Mr' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்ற "ராத்திரி சிவராத்திரி" என்ற பாடல் காரணமாகவே இந்த சர்ச்சை உருவாகியுள்ளது.

'Mrs & Mr' படத்தில் இடம்பெற்றுள்ள "ராத்திரி சிவராத்திரி" எனும் பாடல், இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்கனவே இசையமைத்திருந்த பாடல். அதனை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாகவே தற்பொழுது இளையராஜா குற்றம்சாட்டியுள்ளதுடன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கினையும் பதிவு செய்துள்ளார்.


இந்த வழக்கு திங்கள் கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. சட்டரீதியான பின்னணி மற்றும் காப்புரிமைச் சட்டங்கள் அடிப்படையில் இது ஒரு முக்கிய வழக்காகக் கருதப்படுகிறது. தற்போது இந்த வழக்கு தொடர்பான செய்தி சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியுள்ளது. 

Advertisement

Advertisement