"பிரேமலு" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த மமிதா பைஜூ, தற்பொழுது புதிய சாதனைகளைப் பெற்றுவருகின்றார். மலையாள திரையுலகிலிருந்து வந்த இவரின் திறமையான நடிப்பு மற்றும் அழகு என்பன குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. "பிரேமலு" வெற்றிக்குப் பிறகு, மமிதா பைஜூவின் பெயர் ரசிகர்களிடையே மட்டுமல்லாது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இடையேயும் மிகவும் பேசப்பட்டு வருகின்றது.
தமிழ் சினிமாவின் இளம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் தனக்கென தனி இடத்தை பிடித்த பிரதீப் ரங்கநாதனுடன், மமிதா பைஜூ ஜோடி சேர்ந்து நடித்த டிராகன் பட வெற்றியின் பின் அவருக்கான படவாய்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
டிராகன் வெற்றியின் பின் மமிதா தன்னுடைய ஸ்டைல் மற்றும் அழகை உயர்த்தியுள்ளார் என்றே சிலர் கூறுகின்றனர். புதிய போட்டோஷூட்டில் மமிதா அணிந்துள்ள ஆடை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மமிதா பைஜூவின் போட்டோஷூட் இன்ஸ்டாவில் வெளியாகியதும் ரசிகர்கள் அதற்கு அதிகளவான பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். சில ரசிகர்கள், மமிதா இன்னும் அதிக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் பிரபல நடிகை பட்டத்தை பிடிப்பார் எனவும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
Listen News!