தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தனது இசையால் ரசிகர்களை தூக்கிப் போடும் தருணம் வந்து விட்டது. தற்போது அவர் நடித்துள்ள ‘கூலி’ படத்தின் இரண்டாவது பாடலான ‘மோனிகா’ நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது.
‘கூலி’ ஸ்டைலிஷ் ஹீரோ ரஜினிகாந்தை மெருகூட்டும் மாஸ் மசாலா திரைப்படமாகும். இதற்கு முன் வெளியான "சிக்கிட்டு.." என்ற பாடல் யூடியூபில் ரிலீஸாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்போது இரண்டாவது பாடலான ‘மோனிகா’ பற்றி பெரிய ஹைப் உருவாகியுள்ளது.
‘மோனிகா’ என்ற பெயர் கேட்டவுடனே, ரசிகர்களிடையே இது ஒரு காதல் பாடலாக இருக்கும் என்ற ஊகம் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. அத்துடன், ‘மோனிகா’ பாடல், ஜூலை 11ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்தவுடனே ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் குதூகலிக்கின்றனர்.
Listen News!