சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டு 'ஜெயிலர்’ படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதனை நெல்சன் திலீப்குமார் இயக்கியதுடன் அனிருத் இசையமைத்திருந்தார். இதில் ரஜினியின் மாஸான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில், இன்று படப்பிடிப்பினை துவங்கியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படக்குழு வெளியிட்ட தகவலின்படி, ‘ஜெயிலர் 2’ பெரும்பாலும் வேறு நாட்டில் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. படத்தின் கதைக்கேற்ப பிரம்மாண்டமான ஷூட்டிங் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஜெயிலர் 2’இல் புதிதாக பல நடிகர்கள் இணையவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. முதல் பாகத்தில், மோகன் லால், சுனில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தனர். இரண்டாம் பாகத்திலும், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரையுலகிலிருந்து பிரபல நடிகர்கள் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Listen News!