• Dec 26 2024

நாங்க பேச கூடாது படம் பேசணும் இன்னைக்கு படம் பேசிருச்சு... வெளியானது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்... அனல் பறக்கும் விமர்சனங்கள்... ராகவா-ஸ்,ஜே, சூர்யா- சுப்புராஜ் கருத்து...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, தேசிய விருதையும் வென்று அசத்தியது. இந்த நிலையில், தற்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற பெயரில் எடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.


இப்படத்திக் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோ முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். முதல் பாகத்துக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கும் இசையமைத்து உள்ளார். இப்படம் தீபாவளி விருந்தாக இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது.


இப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த படத்தினை ரசிகர்களுடன் இணைந்து பார்ப்பதற்காக நடிகர் ராகவா, ஸ்.ஜே சூர்யா ,இயக்குனர் சுப்புராஜ் உட்பட ஜிகர்தண்டா 2 திரைப்பட குழு திரையரங்கம் சென்றிருந்தனர். படம் உண்மையில் நல்ல வரவேற்பை பெற்றியிருக்கிறது.


இந்நிலையில் இயக்குனர் சுப்புராஜ் கூறுகையில் சூப்பராக இருக்கிறது படம், எல்லாரும் பாருங்க எல்லாருக்கும் நன்றி, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது ரொம்ப சந்தோசம் என கூறியுள்ளார். 


அத்தோடு நடிகர் ஸ்,ஜே,சூர்யா இவ்வாறு கூறினார். கார்த்திக் சுப்புராஜ் எப்போவும் சொல்லுவாரு நாம பேசக்கூடாது  நம்ம படம் தான் பேசணும் என்று இன்னைக்கு படம் பேசிருச்சு 2 பாகம் எல்லாம் உண்மையாலும் கண் கலங்கி தொண்டை அடைக்குது ஒரு தமிழனின் படம் இன்று உலகம் முழுவதும் ரீச் ஆகுறத்தில் ரொம்ப சந்தோசம் இது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் தீபாவளி என்று தெரிவித்துள்ளார்.


கதையின் நாயகன் நடிகர் ராகவா படம் தொடர்பாக இவ்வாறு கூறினார். முதல் நாளே மிக பெரிய ஓப்பனிங் தந்து இருக்குறீங்க ரொம்ப சந்தோசம். இந்த படம் எனக்கு ரொம்ப இஸ்பெஷல். கார்த்திக் சுப்புராஜ் படம் தான் இது எல்லாருக்கும் நன்றி. படம் சூப்பரா இருக்கு குடும்பத்தோட பாருங்க என்று கூறியுள்ளார்.      

Advertisement

Advertisement