தமிழ் சினிமாவில் நடிப்பால் மட்டுமல்லாமல், சமூகத்துக்கான பங்களிப்புக்களாலும் பிரபலமானவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். அண்மையில் வெளியாகியுள்ள ஒரு நேர்காணலில், ‘டூரிஸ்ட் பாமிலி’ திரைப்படத்தில் ‘முல்லி’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த சிறுவன் நயன்தாரா குறித்து சில உண்மைகளை வெளியிட்டுள்ளார்.
‘டூரிஸ்ட் பாமிலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் ஒன்றான ‘முல்லி’ எனும் சிறுவனின் நடிப்பு ரசிகர்கள் மனதில் சிறப்பாகப் பதிந்தது.
அந்த சிறுவன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, “என்னுடைய ஸ்கூல் பீஸ் எல்லாம் நயன்தாராவும் விக்னேஸ்வரனும் தான் கட்டுறாங்க. அவங்க ரொம்பவே ஹெல்ப்பா இருக்காங்க.." என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகள் ரசிகர்களை மிகவும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன. அவர்கள் இந்த உதவியை வெளிப்படையாக சுட்டிக்காட்டாமல் செய்தது பாராட்டத்தக்கது என்று சிலர் கருத்துக்களை கூறுகின்றனர்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் மனிதநேயம் அடங்கிய செயல்களில் ஈடுபடுவது முதல் முறை அல்ல. ஏற்கனவே, குழந்தைகளுக்கான உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை எனப் பலவற்றை செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!