• Dec 26 2024

நயன்தாராவின் புது பார்ட்னர் இவரா? விக்னேஷ் சிவனுக்கும சம்மதம்!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

நயன்தாராவுக்கு புது பார்ட்னர் கிடைத்துள்ள நிலையில் விக்னேஷ் சிவனுக்கு டபுள் சம்மதம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை நயன்தாரா நடிகையாக மட்டும் இல்லாமல் பல பிசினஸ்கள் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக 9 ஸ்கின் கேர் என்ற நிறுவனத்தின் மூலம் அவர் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் என்பது தெரிந்தது.

நயன்தாராவின் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாட்டிலும் பிரபலம் ஆகி வருகிறது என்பதும் பிசினஸ் அமோகமான லாபத்துடன் சென்று கொண்டிருப்பதாகவும் வருகிறது.

இந்த நிலையில் திடீரென நயன்தாரா, தைரோகேர் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் வேலுமணி ஆரோக்கியசாமி என்பவரை விக்னேஷ் சிவனுடன் சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து விக்னேஷ் சிவன் தனது  சமூக வலைத்தளத்தில் ’நானும் நயன்தாராவும் எம்பிஏ பட்டதாரிகள் இல்லை, எனக்கும் அவருக்கும் சினிமா மட்டும்தான் தெரியும், அதை அதையும் நாங்கள் தினம் தினம் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அதே நேரத்தில் புத்திசாலித்தனம் மற்றும் விலை மதிப்பு இல்லாத அனுபவத்தை பெற்ற திரு வேலுமணி அவர்களுடன் சில மணி நேரம் செலவழித்ததை நாங்கள் பெருமையாக தருகிறோம். எங்கள் வணிகங்கள் அனைத்திலும் எப்போதும் நாங்கள் சரியான விஷயங்களை செய்வதற்கு அவரிடம் அவ்வப்போது ஆலோசனை செய்து வருகிறோம். அவருடைய சந்திப்பு எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் என்ற பதிவை பார்க்கும் போது நயன்தாரா புது பிசினஸ் தொடங்க இருப்பதாகவும் அனேகமாக நயன்தாரா மற்றும் வேலுமணி பார்ட்னர் ஆக சேர்ந்து ஏதாவது ஒரு புது பிசினஸ் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement