ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘கூலி’ திரைப்படம், தற்போது தமிழ் சினிமா உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானதும், ரஜினியின் ஸ்டைலிஷ் லுக், BGM, பஞ்ச் டயலாக் உள்ளிட்டவை ரசிகர்களை சொக்க வைத்தது.
இந்நிலையில், இப்போது வெளியாகியிருக்கும் புதிய அப்டேட் ஒன்று தமிழ் திரையுலகை ரணகளமாக மாற்றியுள்ளது. அந்த அப்டேட் என்னவென்றால், ‘கூலி’ படத்தில் கமல் ஹாசனின் குரல் வரும் என்ற தகவல்!
சமீப நாட்களில் ‘கூலி’ படத்தின் திரைக்கதை, கதையின் நுணுக்கங்கள், மற்றும் ‘LCU’ தொடர்பான தகவல்கள் ஒட்டுமொத்தமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்போது, ரசிகர்களை அதிரவைக்கும் அப்டேட் ஒன்று ரசிகர்களிடையே பரவியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கூலி படத்தின் ஆரம்பக் காட்சியில் கமல் ஹாசனின் குரலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வெறும் கதைக்களத்திற்கு தேவையான குரல் அல்ல. ஒரு வலிமையான ஓப்பனிங் டயலாக் வடிவில் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
Listen News!