• Jul 14 2025

வெண்ணிலாவுக்காக விஜயை விட்டுகொடுத்த காவேரி.! பசுபதியிருக்கிற இடத்தை அறியும் நிவின்; மகாநதி

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

மகாநதி சீரியலில் இன்று, காவேரி வெண்ணிலாவை பார்த்து நான் சொன்னதை கேட்டு நீ தலை ஆட்டினது எனக்கு ரொம்பவே சந்தோசமாக இருக்கு என்று சொல்லுறார். மேலும் நீ நல்ல படியா வந்திரனும் என்று நான் எவ்வளவு வேண்டிகிட்டேன் தெரியுமா என்கிறார். அதனை அடுத்து உனக்கு ஏதாவது ஆகியிருந்தால் எனக்கு தான் அந்த குற்றஉணர்ச்சி வந்திருக்கும் என்று சொல்லுறார். அதோட விஜயும் இதே ஜோசனையா தான் இருக்கிறாரு என்கிறார் காவேரி.


அதைக் கேட்ட, வெண்ணிலா இப்புடி எல்லா விஷயத்திலயும் விஜய் என்று சொல்லிக் கொண்டிருக்கிற நிஜமாவே விஜயை எனக்கு விட்டுக் கொடுப்பியா என்று கேட்கிறார். மேலும் விஜயை காப்பாத்தனும் என்று எனக்கு அதிக அக்கறையும் பதற்றமும் இருக்கு அதுதான் பொலீஸ் விசாரிக்க வந்தப்போ கூட நான் எதுவுமே சொல்லேல என்கிறார். இதனை தொடர்ந்து காவேரி வெண்ணிலாகிட்ட அழுதுகொண்டே விஜய் கிட்ட இருந்து நான் விலகுறேன் என்று சொல்லுறார். 

பின் காவேரி தன்ர வயித்தில வளருற குழந்தை மேல கை வைச்சு தான் பண்ணின சத்தியம் உண்மை என்கிறார். அதைக் கேட்ட வெண்ணிலா ஷாக் ஆகுறார். பின் நிவின் ராகினிக்கு போன் எடுத்து உன்ன நான் மிஸ் பண்ணிட்டேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ராகினி, என்ன நிவின் என்கிட்ட செண்டிமெண்டா கதைச்சு எங்க அப்பா இருக்கிற இடத்தை அறியலாம் என்று நினைக்கிறீயா என்று கேட்கிறார்.


இதனை தொடர்ந்து நிவின் ராகினி வீட்ட போய் நிற்கிறார். பின் நிவின் ராகினி கிட்ட விஜயை பார்க்க பாவமா தெரியலையா என்று கேட்கிறார். அதுக்கு ராகினி பாவமா தான் இருக்கு ஆனாலும் எல்லாரும் சேர்ந்து எங்க அப்பா மேல எல்லோ பழியையும் போடுறாங்க என்கிறார். பின் ராகினிக்கு பசுபதி போன் எடுத்து உடனே வரச்சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement