• Dec 26 2024

இனி இவருக்கு பதில் இவர்! தளபதியை கொப்பி அடிக்கும்SK! சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் விஜயின் வில்லன்!

subiththira / 8 months ago

Advertisement

Listen News!

எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி தனது திறமையின் மூலம் சின்னத்திரையில் இருந்து சினிமா துறைக்கு அறிமுகமானவர் சிவகார்த்திகேயன் ஆவார். இவர் தனுஷின் "மூணு" திரைப்படத்தின் மூலம் காமெடியனாக  அறிமுகமாகி "மனம் கொத்தி பறவை"  திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் மாறினார். தொடர்ந்து இவர்  நடித்த பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்து இன்று அதிக  சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக  உள்ளார்.


இந்த நிலையில் இவரது நடிப்பில் AR முருகதாஸ் இயக்கத்தில் தயாராகும் அடுத்த திரைப்படத்தில் புதிதாக ஒருவர் இணைந்துள்ளார். முருகதாஸ் இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் இணைகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் ஆரம்பித்துள்ள நிலையில் விஜயின் துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் குறித்த படத்தில் இணைகிறார். 


இரண்டாவது முறையாக முருகதாசுடன் வித்யுத் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் சினிமாவை விட்டுவிலக போகிறார் என்று கூறியதும் அடுத்த தளபதி யார் என்ற கேள்வி எழுந்து வருகின்றது. இந்த நிலையிலேயே முருகதாஸ் இந்த கதையை முதலில் விஜய்க்காக எழுதியதாகவும் கால்சீட் கிடைக்காததால் இப்பொது சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றும் கூறி இருந்தார்.


அதனை தொடர்ந்தே தற்போது விஜயின் படத்தில் வில்லனாக நடித்தவரையே மீண்டும் வில்லனாக எடுத்தது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. சிவகார்த்திகேயன் சமீபத்தில் விஜயை போன்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சந்திப்பு மேற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement