• Dec 26 2024

சென்னையில் களைகட்டிய இந்திரஜாவின் ரிசப்ஷன்! நேரில் சென்று வாழ்த்திய கமல், எஸ்.கே..

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.

தனது தாய்மாமனான கார்த்திக் என்பவரைகடந்த 24ம் திகதி  திருமணம் செய்துள்ளார் இந்திரஜா. இவர்களின் திருமணம் மதுரையில்  கோலாகலமாக நடைபெற்றது. திருமண ரிசப்ஷனில்  பல பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

இதை தொடர்ந்து இந்திரஜாவின் திருமணத்திற்கு பின்னர் முதலாவதாக அவர்கள் செல்லும் ட்ரிப், மாமியார் வீட்டுக்கு சென்ற தருணம், சரத் குமார் வீட்டிற்கு அழைத்து கொடுத்த விருந்து, மாப்பிள்ளை வீடு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களை கவர்ந்து வருகின்றன.


இந்த நிலையில், சினிமாத் திரையுலகினர் கலந்துகொள்வதற்காக இந்திரஜாவின் திருமண ரிசப்ஷன் சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதாவது, இந்திரஜாவின் திருமணம் மதுரையில் நடைபெற்ற காரணத்தால் பெரும்பாலான திரை பிரபலங்கள் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் இந்த ரிசப்ஷன் சென்னையில் நேற்று இரவு பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

இந்த ரிசப்ஷனில் இந்திரஜா லைட் பிங்க் கலர் புடவை அணிந்து ஜொலித்துள்ளார். ரோபோ சங்கரும் கோட் சூட் அணிந்து வந்த பிரபலங்களை வரவேற்றுள்ளார். இது தொடர்பிலான வீடியோக்கள் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement