• Dec 26 2024

தங்கமயிலை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ராஜி.. முழுமையாக சப்போர்ட் செய்யும் பாண்டியன்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்று செந்தில் - மீனா என்ன ஆனார்கள், செந்தில் ஏன் போன் எடுக்கவில்லை, உனக்கு போன் செய்தானா என்று கோமதி இடம் பாண்டியன் கேட்க , கோமதி போன் செய்யவில்லை என்று இழுத்தபடி கூறுகிறார். ராஜியும் அமைதியாக இருக்க அப்போது தங்கமயில், ‘மீனா போன் செய்யவில்லை, ஆனால் மெசேஜ் அனுப்பினார், பீச்சில் இருக்கும் போட்டோ அனுப்பினார்’ என்று சொன்னபோது பாண்டியன் கோபம் அடைகிறார்.

செந்தில் போன் எடுக்கவில்லை என்று நான் வருத்தத்தில் இருக்கும்போது அவர்கள் போட்டோ அனுப்பியதை சொல்வதில் உனக்கு என்ன பிரச்சனை? என்று கோமதியை திட்ட, கோமதி சமாளிக்கிறார். அப்போது பாண்டியன் ’எந்த விஷயத்தையும் எனக்கு தங்கமயில் தான் கூறுகிறார், ராஜி டியூஷன் விஷயத்தையும் அவர் தான் கூறுகிறார் என்று கூற ராஜி கோபமாக தங்கமயிலை பார்க்க , தங்கமயில் ’எதார்த்தமாக வேறொரு விஷயம் பேசிக் கொண்டிருக்கும் போது சொல்லிவிட்டேன்’ என்று கூறி சமாளிக்கிறார்.



இதன் பிறகு கிச்சனில் ராஜியிடம் கோமதி புலம்பி கொண்டிருக்கும் போது அங்கு தங்கமயில் வர தங்கமயிலை ராஜி லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார். ’நீங்கள் நல்லது செய்தவதாக நினைத்துக் கொண்டு தேவையில்லாத வேலை செய்கிறீர்கள், இதெல்லாம் இனிமேல் வேண்டாம்’ என்று கூற தங்கமயில் மீண்டும் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோமதி அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். மேலும் ராஜியிடம் இதுபோல் சொல்லாதே என்று கூற, நான் சரியாகத்தான் சொன்னேன், நான் ஒன்னும் தவறாக சொல்லவில்லை என்று கூறுகிறார்.  இதனை அடுத்து சரவணனிடமும் நீலிக்கண்ணீர் வடித்து ராஜி, அத்தை திட்டியதாக கூற சரவணன் அவருக்கு சமாதானம் சொல்கிறார்.

இதனை அடுத்து எல்லோரும் சாப்பிட உட்காரும்போது தங்கமயில் ஏன் சாப்பிட வரவில்லை என பாண்டியன் கேட்க, தங்கமயிலை அழைத்து சாப்பிட சொல்கிறார். ராஜியையும் பரிமாறச் சொல்கிறார். அப்போது ராஜி பரிமாறிக் கொண்டிருக்கும் போது கதிருக்கும் பரிமாறு என கோமதி சொல்ல, கதிருக்கு ராஜி பரிமாறும்போது இருவரும் ரொமான்ஸ் ஆக பார்க்கும் காட்சியுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement